இலங்கையின் வீதிப்போக்குவரத்து, பொருளாதார அபிவிருத்தியின் இன்றியமையாத ஒரு முன் தேவைப்பாடாகக் கருதப்படுகிறது.
மக்கள் எளிதில் போய்வரக்கூடியதும் பொருட்களை இலகுவில் கொண்டுசெல்லக்கூடியதுமான நம்பகமான போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்தல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். அது மக்களின் கல்வித் தரங்களையும் சுகாதார நிலைமையையும் மற்றும் சமூக தரங்களையும் முன்னேற்றுவதற்கு உதவும்.
இந்நிகழ்வுகளை அறிந்துள்ள அதிமேதகு ஜனாதிபதி, “மஹிந்த சிந்தனை” மூலம் ஒவ்வொரு கிராமத்தையும் எல்லா வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யும் பரந்த நோக்குடன் “மக நெகும” வின்கீழ் எல்லா கிராமிய வீதிகளையும் அபிவிருத்தி செய்ய உறுதிபூண்டுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நம்பத்தகு முறையில் அணுகத்தகு வீதி முறையொன்றை செழிப்பான கிராமிய சமுதாயத்துக்கு ஏற்பாடு செய்தல்.
எமது பணி
எல்லா பருவகாலங்களிலும் அணுகத்தக்கதாக நம்பத்தகு முறையில் ஏற்பாடு செய்வதன்மூலம் இலங்கையின் கிராமிய சமூகத்தினரின் சமூக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்.
குறிக்கோள்கள்
ஏற்றுக்கொள்ளத்தகு மட்டத்தில் கிராமிய போக்குவரத்து உள்ளகக் கட்டமைப்பில் முதலீடுகளை ஊக்குவித்தல்.
வறுமையைக் குறைப்பதற்கு செயல்திறனான கிராமிய போக்குவரத்து உள்ளகக் கட்டமைப்பு முதலீட்டைப் பணித்தல்.
பொறியியலாளர் சமூகத்தினரிடையே பொறுப்புவாய்ந்த நிருமாணம் மற்றும் பேணிவரல் முறையொன்றை உருவாக்கல்.கிராமிய வீதி வலையமைப்பைப் பொறுப்பேற்பதற்காக உள்ளூர் சமூகத்தினரின் ஆற்றலை அபிவிருத்தி செய்தல்.
பயன்தரு முறையில் மூலவளன்களை ஒதுக்கும் முறையை உறுதிசெய்வதற்கான முறைமைகளை அபிவிருத்தி செய்தல்.
கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படைக் காரணம்
வறுமை, இலங்கையில் கிராமியப் பகுதியில் பொதுவில் காணப்படக்கூடியதொன்றாகும்.
பெரும்பான்மையான வளர்ச்சி மையங்களிலிருந்து பிரிந்து தனித்து செயற்படுவதே கிராமிய வறுமைக்கான முக்கிய காரணிகளுள் ஒன்றாகும்.
பொருளாதார வளர்ச்சியை நியாயமான முறையில் உறுதிசெய்வதற்கு, ஏற்றுக்கொள்ளத்தகு மட்டத்தில் கிராமிய உள்ளகக் கட்டமைப்பில் முதலீடுகள் செய்யப்படுதல் வேண்டும்.
இலங்கையின் கிராமிய வீதிப் பிரிவினர், வரிகள் அல்லது அறவீடுகள் என்ற வகையில் ஏதேனும் வருமானத்தைப் பெறுவதில்லை. எனவே வீதிகளைப் பராமரித்தல் புணருத்தாரணம் செய்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் என்பவற்றுக்காக நிதிகளை ஏற்பாடு செய்தல் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கிராமிய இடங்களுக்கு அணுகுவழியை ஏற்பாடு செய்வதிலுள்ள நன்மைகள்
போட்டிச் சந்தையை அணுகுவதற்கு ஏற்பாடு செய்தல்.
கமத்தொழில் மற்றும் ஏனைய விளைபொருட்களுக்குத் தேவையான பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ளல்.
கிராமிய பொதுமக்கள் கல்வி, சுகாதார வசதிகளையும் மற்றும் வர்த்தகம், வாணிபம், தகவற்றொடர்பு மற்றும் ஏனைய சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தல்.
கிராமத்தவர்கள் மின்சாரம் மற்றும் நீர் போன்ற அத்தகை வேறு சேவைகளையும் உள்ளகக் கட்டமைப்பையும் எளிதில் பெற்றுக்கொள்ள ஊக்குவித்தல்.
எமது வீதிகளைப் பற்றி
இலங்கை மொத்தமாக 92,700 கிலோமீட்டர் வீதி வலையமைப்பை உள்ளடக்கியது.
தேசிய வீதிகள்
11,600
12.50%
மாகாண வீதிகள்
16,523
17.80%
கிராமிய வீதிகள
64,658
69.68%
கிராமிய வீதிகள், மொத்த வீதி வலையமைப்பின் ஏறத்தாழ 70 சதவீதத்தையே பிரதிபலிக்கின்றன. பெரும்பான்மையாக இவ்வீதிகள் ஒற்றையடிப்பாதைகளாகவும் வண்டிப் பாதைகளாகவுமே ஆரம்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்வீதிகள் பல்லாண்டு காலம் பராமரிக்கப்படாமலும் புனருத்தாரணம் செய்யப்படாமலும் இருந்து வந்துள்ளன.
ஆகவே, இலங்கையின் அபிவிருத்தித் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், கிராமிய இடங்களுக்கு சிறந்த தொடுப்பு சேவைகளை ஏற்பாடு செய்வதற்காகவும் புனருத்தாரணம் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட குறித்தசில கிராமிய வீதிகளை மீள்வடிவமைப்பதற்காகவும் ஓர் அவசியம் ஏற்பட்டுள்ளது.