2006ஆம் ஆண்டில் 25 மாவட்டங்களில் 2003 கிராமிய வீதிக் கருத்திட்டங்கள் பொறுப்பேற்கப்பட்டன. 2000கி.மீ. பூர்த்தியாக்குவதை நோக்காக இவை கொண்டிருந்தன. 1800 மில்லியன் ரூபா இப்பணியை ஆரம்பிப்பதற்கு ஒதுக்கப்பட்டது. 38898 குடும்பங்கள் பயனடையும்படி ஆயிரம் வீதிகளைப் பூர்த்தியாக்குவதற்காக 2006 ஓகஸ்ட் மாத இறுதியில் 658.23 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
731.38 கி.மீ வீதிகளைப் பூர்த்தியாக்குவதை இலக்காகக்கொண்டு 25 மாவட்டங்களில் 2005ஆம் ஆண்டில் 1,345 கிராமிய வீதிக் கருத்திட்டங்கள்; பொறுப்பேற்கப்பட்டன. பணியை ஆரம்பிப்பதற்காக ஐநூறு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. வருட இறுதியில் 500 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டு, 34,615குடும்பங்கள் பயனடையும்படி 100 சதவீதமான பணி பூர்த்தியாக்கப்பட்டது.
600 கி.மீ வீதிகளின் புனருத்தாரணம், பிரமாண்டமான ஆரம்பமாக 2004ஆம் ஆண்டு ஏழு மாகாணங்களில் ஆரம்பமாகியது. கருத்திட்டத்தின் மதிப்பீட்டுத்தொகை 213 மில்லியன் ரூபாவாகவும் நீளம் 600 கி.மீட்டருமாகும்.