கிராமிய பொருளாதாரத்தையும், கிராமத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காக மேன்மைதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் தொடக்கிவைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுள் ஒன்று மக நெகுமவாகும். அவர் 2004ஆம் ஆண்டு பிரதம மந்திரியாகவும் பெருந்தெருக்கள் அமைச்சராகவும் இருந்தபோது இந்நிகழ்ச்சித் திட்டத்தை தொடக்கிவைத்தார்.