இறுதியாக பதிவுசெய்யப்பட்ட திகதி
31-12-2007
Download Tamil

மேன்மைதகு ஜனாதிபதியின் செய்தி

maganaguma

“மக நெகும” கருத்திட்டத்தின்கீழ் ஆயிரம் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வெற்றிகரமாகப் பூர்த்தியாக்கப்பட்டு நினைவுகூறும் தேசிய வைபவத்தில் இச்செய்தியை மிகவும் திருப்தியுடன் வழங்குகின்றேன்.

இதற்கு விசேட பல காரணங்கள் உண்டு. பெருந்தெருக்கள் என்ற விடயத்தின் அமைச்சர் என்றவகையில் “மக நெகும” கருத்திட்டம் என்னால் தொடக்கிவைக்கப்பட்டது. அதுவரை கிராமிய வீதிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

பெரும்பாலான கிராமங்கள், அணுகு வீதிகள் இல்லாமையாலும் பிரதான பொருளாதாரப் பிரிவிலிருந்து தனித்தே இருந்தன. “மக நெகும” வின் பிரதான குறிக்கோள் இணைப்புத் தொடுப்புக்களை ஏற்பாடு செய்வதாகவே இருந்தது. இந்நோக்கத்துக்காக கடந்த இரண்டு வருட காலத்தின்போது அரச முதலீடு நான்கு மடங்காக இருந்தது.


நிலைபெயரா வீதி வலையமைப்பை உருவாக்குதலே “மக நெகும” எதிர்கொள்ளவேண்டிய சவாலாகும். கருத்திட்டத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் அதனைச் சந்திப்பதற்கான பலத்தையுடையவரே என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

“மக நெகும” வின் காரணகர்த்தா என்ற வகையில், இவ்வைபவத்திற்கு எனது வாழ்த்தைக் கூறுவதில், அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

 

 

 
 

© 2006 Ministry of Road Development All Rights Reserved – Developed in Association with Site By